அட நம்ம மம்முட்டியா இது..? வாலிப வயசுல எப்படி இருக்காரு பாருங்களே…. மனைவி மற்றும் குழந்தைகளுடன் வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..

மலையாளத் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி.

   

இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் குறிப்பாக இவர் நடித்த அழகன், ஆனந்தம், தளபதி ஆகிய திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் கடந்த 1971 இல் தனது 20 வயதில் அனுபவங்கள் பாலிசக்கல் என்ற திரைப்படத்தின் ஜூனியர் நடிகராக அறிமுகமான தொடர்ந்து 1973இல் காலச்சக்கரம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தார்.

1980 ஆம் ஆண்டு சொப்பனங்கள் என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்ட மம்முட்டி மலையாள சினிமாவில் மற்றொரு அடையாளமான மோகன்லாலுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மம்முட்டிக்கு தமிழ் ரசிகர்களின் எப்போதுமே அதிகம். சமீபத்தில் மம்மூட்டி நடித்த மாமாங்கம் திரைப்படம் தமிழிலும் வெளியானது.

தமிழில் இவர் கடைசியாக ராம் இயக்கத்தில் பேரன்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் மம்முட்டி செல்ஃபுத் குட்டி என்பவரை 1979 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் மற்றும் மகள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இவரின் மகனான துல்கர் சல்மான் சென்னையை சேர்ந்த அமல்சுபையா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு துல்கர் சல்மான் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது தந்தையைப் போலவே மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது.

இவரின் தந்தை மம்முட்டி தற்போது ஜோதிகாவுடன் இணைந்து காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் அப்பாவும் மகனும் தொடர்ந்து நடித்துவரும் நிலையில் இவரின் சிறு வயது புகைப்படம் மற்றும் மனைவி குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.