அழகின் அழகே அஸ்கா வா…. இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியின் மனதை மயக்கும் புகைப்படங்கள்…

நடிகை கீர்த்தி ஷெட்டி.. நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்த உப்பன்னா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் இந்த கீர்த்தி ஷெட்டி.

   

நடிகை கீர்த்தி ஷெட்டியின் முதல் படமே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து நடிக்க துவங்கினார் இவர். அந்த வகையில் ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி இயக்கிய தெலுங்கு திரைப்படமான வாரியர் படத்திலும் நடித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி.

மேலும், தமிழில் சூர்யா – பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகை கீர்த்தி ஷெட்டி. ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு டிராப் ஆகிவிட்டது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி ஷெட்டி சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக வலம் வருவதோடு மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது வெள்ளை கலர் மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.