உன்னக்காக பிறந்தேனே எனதழகா…. திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ஆர். சுந்தர்ராஜன்… வைரல் புகைப்படங்கள்…!!!

சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றிய ஆர் சுந்தர்ராஜன் அவர்களின் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்துபல படங்களில் நடித்துள்ளார்.

 

பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தால், ராஜாதி ராஜா, மெல்லத் திறந்தது கதவு, என்கிட்ட மோதாதே, சூரியவம்சம், திருமதி பழனிச்சாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் ஆர் சுந்தர்ராஜன்.

இவர் நடிப்பை தாண்டி பல திரைப்படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். இவர் கடைசியாக 2013 ஆம் ஆண்டு நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ஆர் சுந்தர்ராஜன் டப்பிங் நடிகரான துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திக், தீபக், அசோக் என மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகன் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஆர் சுந்தர்ராஜன் பின்னர் சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சின்ன திரையில் கால் பதித்திருக்கின்றார்.

 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று இவர் தன்னுடைய திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.