தளபதியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் 21 வருடங்களுக்கு முன்பே நடித்த நடிகர் ரவி மரியா… இவர் வில்லன் மட்டும் இல்லங்க இயக்குனரும் கூட… பலரும் அறிந்திடாத சுவாரசிய தகவல்கள் இதோ…

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், பிரபல வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் ரவி மரியா. இவர் நடிப்பில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார், பழனி, கோரிப்பாளையம், கூர்க்கா, தேசிங்குராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

   

அதிலும் குறிப்பாக தேசிங்கு ராஜா படத்தில் ‘மாப்ளைக்கு அவ்ளோ வெறி’ என சூரியை பார்த்து அவர் சொல்லும் வசனம் தற்போதும் மீம் டெம்ப்லேட் ஆக இணையத்தில் இருந்துகொண்டிருக்கிறது. நடிகர் ரவி மரியாவும் இயக்குனர் வசந்த பாலனும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

இருவரும் கல்லூரி காலத்திலேயே மிக நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படங்களிலெல்லாம் நடிகர் ரவிமரியா ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி, பின்னர் ஜீவா நடித்த ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. இவரின் முதல் படத்திற்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நட்டி நடராஜ் நாயகனாக நடித்த மிளகா படத்தையும் இயக்கி இருந்தார்.

இந்த இரு படங்களை தொடர்ந்து, ரவி மரியா படம் இயக்கவில்லை என்றாலும், நடிப்பில் படு பிஸியாகியுள்ளார். கடந்த 2022 ல் இவர் நடிப்பில் இடியட், ஹாஸ்டல், காட்டேரி, குருமூர்த்தி, ஓ மை கோஸ்ட்  ஆகிய படங்கள் வெளியானது. இந்த ஆண்டும் பல படங்கள் வெளியாக உள்ளன. நடிகர் ரவி.

இவர் 2000ல் வெளியான தளபதியின் ‘குஷி’ திரைப்படத்தில், தான் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய அதே படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். தற்பொழுது இவரை பற்றி பலரும் அறியாத இந்த தகவல்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.