தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் வலம் வருபவர் நடிகர் வடிவேலு. ஃப்ரெண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி போன்ற எண்ணற்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர்.
1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் . இப்படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
இவர் நடிப்பில் அண்மையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வெளிவந்தது. எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் , சந்திரமுகி 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
தற்பொழுது நடிகர் வடிவேலு சீரியல் நடிகை ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்து தற்போது சீரியல் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை ரவீனா.
இவர் சமீபத்தில் நடிகர் வடிவேலுவை சந்தித்திருக்கிறார். அப்போது அவரை பார்த்த மகிழ்ச்சியில் ரவீனா அவருடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அப்போது தான் வடிவேலு அவரின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சி, அணைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘பொது இடத்துல இப்படியா?’ என்று சரமாரியாக காமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த வைரல் புகைப்படம்…