தெனிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன் முதலில் மாடலிங் துறையில் தான் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
நடிகை சமந்தா தற்பொழுது ‘மயோசிட்டிஸ் ‘ நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்பொழுது சிகிச்சை முடிந்து நாடு திரும்பியுள்ள அவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக ‘சகுந்தலம்’ திரைப்படம் உருவாகி வரும் நிலையில், ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து நான்கு படங்களுக்கும் மேல் கமிட் செய்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.
இதில் முதலாவதாக அவர் ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்கும் ‘சிடேட்டால்’ என்ற வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கூட சண்டை பயிற்சியின் போது கைகளில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களை சமந்தா இணையத்தில் பதிவு செய்திருந்தார். சமூகவலைத்தளங்களில் சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது கல்லூரி பருவத்தில் தனது தோழிகளுடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
வைரலாகும் புகைப்படம் இதோ…