தளபதி விஜயின் மகளா இது?… இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போலயே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய்.’ வாரிசு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

மேலும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து, சமீபத்தில் சென்னை திரும்பினார் நடிகர் விஜய். இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் வேட்டைக்காரன் படத்திலும், திவ்யா தெறி படத்திலும் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ‘தெறி’ படத்தில் நடித்தபோது சின்னப்பெண்ணாக இருந்த திவ்யா சாஷா, தற்போது அடையாளம் தெரியாமல் மளமளவென வளர்ந்துவிட்டார்.

இவர் தற்பொழுது தனது தோழிகளுடன் இணைந்து எடுத்த மாடர்ன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.தற்பொழுது வெளியாகியிருக்கும் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ‘இளம் நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போலயே’  என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.