‘சூப்பர் சிங்கர்’ நடுவர் பென்னி தயாள் மனைவியை பார்த்துளீர்களா?…வைரலாகும் புகைப்படம்…

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி சொற்களில் ஷோகளில்  ஒன்றுதான் ‘சூப்பர் சிங்கர்’.

   

சூப்பர் சிங்கர்’. நடுவராக இருப்பவர் தான் பென்னி தயாள்.  தற்போது ‘சூப்பர் சிங்கர்’ சீனியர் நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சி  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

பென்னி தயாள் தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர்.இவர் அபுதாபியை பூர்விகமாக கொண்டவர்.

இவர் 2002இல் ரஜினி நடிப்பில் வெளியான ‘பாபா’ படத்தில் ‘மாயா… மாயா..’. என்ற பாட்டின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார்.

மேலும் இவர் தமிழ், இந்தியில் மட்டுமே அதிகமான பாடல்களையும் பாடியுள்ளார். தமிழில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் ‘ஒ ரிங்கா ரிங்கா’ என்ற பாடலை பாடியுள்ளார் .

இதை தொடர்ந்து விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் ‘தமிழ் பசங்க’ என்ற பாடலை  பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார் .

இவர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற ‘உனக்கென்ன வேண்டும் சொல்லு..” என்ற பாடலை பாடி பல பாராட்டுகளை பெற்றார்.

இது போன்ற  பல ஹிட்டான பாடல்களை படி  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது வெளியான புஷ்பா ,RRR போன்ற டப்பிங் படத்தில் தமிழ் பாடல்களும் பாடியுள்ளார்.

இவருக்கென தனி ரசிகர் கூட்டதை உருவாக்கி உள்ளார்.  இவர் மேற்கத்திய பாணியில் ஹிப் பாப் இசை பாடுவதில் மிகச் சிறந்தவர்.

திரைப்பட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இவரின் திறமை  அறிந்து இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

இவர் தமிழில்  ‘பல்லேலக்கா பல்லேலக்கா’, ‘டாக்ஸி டாக்ஸி’ ‘ஒ மணப் பெண்ணே’ போன்ற  பல பாடல்கள் பாடியுள்ளார்.

பென்னி தயாள்  பல ஆண்டுகளாக கேத்தரின் என்பவரை காதலித்து வந்தார். இவர் 2016 ஆம் ஆண்டு பெங்களூரில் கேரளா முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்திற்கு பாலிவுட் ,கோலிவுட் என பல்வேறு  பிரபலங்கள் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது.   இதை பார்த்த ரசிகர்கள் பென்னி தயாளின் மனைவியா இவர்?… என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.