முன்னணி நடிகர் விஜயகாந்தின் அறிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த்.இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர்.

   

இவர் ஆகஸ்ட்25தேதி  1952ஆம் ஆண்டு பிறந்தார் .விஜயகாந்தின் இயற்பெயர் விஜய்ராஜ்  அழகர்சாமி. சினிமாவிற்காக தன் பெயரை விஜயகாந்த்  என்று மாற்றிக்கொண்டார்.

சின்ன வயதிலேயே சினிமாவின் மீது  ஆர்வம் கொண்டவார். இவர் முதன் முதலில் 1979 ஆம் ஆண்டு வெளியான  ‘இனிக்கும் இளமை’படமானது மக்கள் நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை.

 

அதன் பிறகு  1980 ஆம் ஆண்டு  வெளியான ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தின் மூலம்  மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு பெற்றார் .

எஸ்.ஏ.சந்திரசேகரன்  இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலமாக  தனக்கான ரசீகர் பட்டாளத்தை  உருவாக்கினார்.

இப்படமானது  மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும்  ரீமேக் செய்யப்பட்டது.

‘தூரத்து இடிமுழக்கம்’ படமானது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதலில் திரையிடப்பட்டது.

1984 ஆம் ஆண்டு  வெளியான ‘வைதேகி காத்திருந்தாள்’படமானது வெற்றிப்படமாக அமைந்தது.  அதே ஆண்டு   வேங்கையின் மைந்தன், சபாஷ் உள்பட 18 படங்கள்  இவர் நடிப்பில்  வெளியானது .

நாயகனாக ஒரு நடிகரின் படம் ஒரு வருடத்தில் 18 வெளியானது, இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.

ஆரம்பத்தில் விஜயகாந்தின் கறுப்பு நிறம் காரணமாக முன்னணி நடிகைகள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்தனர்.

இவரின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு விஜயகாந்துடன் நடிக்க ஒருகாலத்தில் புறக்கணித்தவர்களே அவருடன் நடிக்க போட்டி போட்டனர்.

தமிழின் முதல் 3டி படமான ‘அன்னை பூமி’ படத்தில்  நடித்தார் .ஆக்ஷன் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.

‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் முதல்முதலாக காமெடி காட்சிகளில் நடித்தார். நகைச்சுவையை மையப்படுத்தி வந்த முதல் விஜயகாந்த் படம் இது.

1985 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படமானது  எவர்கிரீன் படமாக  அமைந்தது,

இந்தப் படம் தமிழகத்தில் 20 திரையரங்குகளில் 200 நாள்களை கடந்து ஓடி சாதனைப் படைத்தது.இப்படத்திற்காக   சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றார் விஜயகாந்த்.

இவர் தமிழில்  கூலிக்காரன்,உழவன் மகன் ,பூந்தோட் காவல்காரன் ,செந்தூரப்பூரே நல்லவன்,புலன்விசாரணை,சத்ரியன்,ஆலயம் புரொடக்ஷன்ஸ்,போன்ற பல படங்களில்நடித்துள்ளார்.

இவரின்  100 வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மாபெரும் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து இவரை கேப்டன் என்று ரசிகர்கள்  மத்தியில் அழைக்கப்படார்.

விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த ‘வானத்தப்போல’ 250 நாள்களை கடந்து திரையில் ஓடியது.

வானத்தப்போல படத்துக்கு இரண்டு தமிழக அரசு விருதுகளும், சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தனர்.

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜயகாந்த் படங்களில் நடிப்பதை குறைத்தார். ஒருகட்டத்தில் முழுமையாக நடிப்பதையே நிறுத்தினார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘விருதகிரி’.

நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.