‘பரியேறும் பெருமாள்’ பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா?… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லிசி ஆண்டனி. இவர் பொம்மி, நாயகி, நட்சத்திரம் நகர்கிறது, ராங்கி, ஜோஸ்வா, நயன்தாராவுடன் கனெக்ட், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான விக்டீம் என பல திரைப்படங்களில் தனது ஆசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

   

சமீபத்தில் இவருக்கு ‘தீ பினோமினல் சி’ அவார்டும் வழங்கப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு தொழிலும் சாதித்த தனித்துவமான பெண்களைகெரவப்படுத்தும் விதமாக இந்திய தேசிய வழக்கறிஞர்கள் சங்கம் இந்த அவார்டு ஒவ்வொரு துறையிலும் வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் இந்த அவார்டை பெற்றார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இத்திரைப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து என பல நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் இந்த சமுதாயத்தில் தலை விரித்தாடும் ஜாதி கொடுமைகளை பற்றி கூறுவதால் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் காலேஜ் ப்ரொபஸராக நடித்து அசத்தினார் நடிகை லிசி ஆண்டனி. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் லிசி ஆண்டனி. இவர் தற்பொழுது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.