இந்த புகைப்படத்தில் பள்ளி சீருடையில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா?… கண்டுபுடிங்க பார்க்கலாம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது கனெக்ட் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.அடுத்ததாக இவர் நடிப்பில் இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இத்திரைப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கு மாதங்களில் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறி திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது .

இரட்டை குழந்தைகளுக்கு தாய் தந்தையான இருவரும் பல சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டனர். தற்பொழுது அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்தவகையில் நடிகை நயன்தாராவின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை நயன்தாராவா இது?’ என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…