‘ஜே ஜே’ பட நடிகை பூஜா உமா சங்கரின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?…. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் பூஜா உமாசங்கர். ஜூன் 25 தேதி  1981 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

   

 

இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்.தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்தார். பெங்களூர் உள்ள  மவுண்ட் கார்மல் காலேஜில் பி.காம் படித்தார்.

அதன்பின்னர் வால்பாறையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்தார்.

அப்போது அவருடைய நண்பர்  ஜீவா பூஜாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.

2003 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே  என்ற படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகினார்.

இதை தொடர்ந்து அட்டகாசம் ,உள்ளம் கேட்குமே, ஓரம்போ,  பட்டியல், ஜித்தன், போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்யாவுடன் நடித்த நான் கடவுள் என்ற படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து இவர் தமிழ் , சிங்களம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு போன்ற  மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூஜா உமாசங்கர் இலங் கை  தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.

ஒரு சில ஆண்டுகளில் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது  அதன் பின் இவர் கொழும்புவில் ஸ்ரீலங்கா தொழிலதிபர் பிரசான் டேவிட் வித்தகனை பூஜா திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .