‘நான்கு வருட பயணம் முடிவுக்கு வந்தது’… ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த கரு. பழனியப்பன்….வைரலாகும் பதிவு இதோ…

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் கரு. பழனியப்பன். நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கரு. பழனியப்பன். சிவப்பதிகாரம், பிரிவோம், சந்திப்போம், மந்திர புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமில்லாமல் நட்பே துணை, டி பிளாக் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

   

அரசியலில் அதீத ஆர்வம் கொண்ட கரு. பழனியப்பன் நடப்பு அரசியல் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசி வந்தார். இந்நிலையில் தான் ஜீ தமிழில் ‘தமிழா தமிழா’ என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்த துவங்கினார். விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக கோபிநாத் நடத்தி வரும் பிரபலமான ‘நீயா நானா’ நிகழ்ச்சியை போன்று ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது.

இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெறும். அவர் பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி பாஜக பிரமுகருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால் கரு.பழனியப்பன் திராவிட இயக்க சிந்தனையாளர். இந்த நிலையில் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியில் தொடர்ந்து திராவிட சிந்தனைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமான கரு பழனியப்பன் தற்பொழுது இந்நிகழ்ச்சியை விட்டு  விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.

சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம்  என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. நன்றி’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.