நடிகை சிவரஞ்சனியின் மகன் மற்றும் மகளைப் பார்த்துள்ளீர்களா?… என்ன ஒரு அழகான புகைப்படம்…

90s களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவரது பூர்வீகம் சென்னையில் உள்ள  மைலாப்பூர் ஆகும்.

   

இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே பல நாடகங்ளில் நடித்து பாராட்டுக்கள் பெற்றுள்ளார் .

இவர் 1990 ஆம் ஆண்டு ‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தலைவாசல், பொன் விளக்கு , அரண்மனை காவலன்,தாலாட்டு ,ராசா மகன் ,

கலைஞர் ,ராஜதுரை ,காத்திருக்க நேரமில்லை ,புதிய தென்றல் என பல படகளில் நடித்துள்ளார்.

இவர், தமிழ், தெலுங்கு மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளில்  35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  இவர் சரத்குமார் ஜோடியாக நடித்த ‘அரண்மனை காவலன்’ என்ற திரைப்படம்மூலம் மக்கள் மத்தியில்   பிரபலமானார்.

அதன் பிறகு வெவ்வேறு மொழி படங்களில்  மிகவும் பிசியாக இருந்தார். இவர் 1998 ஆம் ஆண்டு ‘துர்க்கை அம்மன்’ என்ற தமிழ் படத்திற்கு பிறகு  எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இவர் தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு  21 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி தன் குடும்பத்துடன் ஆந்திராவில் வசித்து வருகிறார்.

இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர்களுக்குஇரண்டு மகனும்  ஒரு மகளும் உள்ளனர் .

இவர்களில் மூத்த மகனான ரோஷன் தற்போது நிர்மலா கான்வெண்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .