லண்டனில் தனது காதலருடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகை சுருதிஹாசன்… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.  இதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

   

இவர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் சிறு வயதிலேயே  குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் நடிகர் மைக்கேலை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் காதலை முறித்துக் கொண்டதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்பொழுது காதலித்து வருகிறார். இவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார் . சாந்தனு ஹசாரிகா மும்பையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களிருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வப்பொழுது தனது காதலருடன் டேட்டிங்கும் சென்று வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நடிகை சுருதிஹாசன் தனது காதலரான சாந்தனு ஹசாரிகாவுடன் லண்டனில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.