ஆலியா மானசா சஞ்ஜீவ் விவகாரத்து உண்மையா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக அறிமுகமானவர் ஆலியா மானசா. பின்பு அவருக்கு ‘ராஜா ராணி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் என்பவருடன் இணைந்து நடித்தார். சீரியல் ஜோடியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

   

ராஜா ராணி சீரியலின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலும் தற்போது ஆலியா மானசா நடித்து வந்தார். தற்பொழுது சஞ்சீவ் சன் டிவியின் கயல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து ஆலியா மானசாவும் சன் டிவியில் நடித்து வருகிறார். ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதிகள் அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியிடுவர்.

இந்த நிலையில் சமீபத்தில் அதிகமாக ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடியாக புகைப்படங்களை இணையத்தில் போஸ்ட் போடாமல் இருப்பதால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வந்தது. இது பொய் என்பதை குறித்து வீடியோ ஒன்றை ஆலியா வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. வீடியோ இதோ,

https://www.instagram.com/reel/C3jz88uR-Z9/?igsh=MW53OGRtdDJ5ZXozeg==