இவர மட்டும் ஒலிம்பிக்கு அனுப்புனா?….. இவருக்கு தங்கம் நிச்சயம் கிடைக்கும்…. மிரள வைத்த வெயிட்டர்…. ஆனந்த் மகரிஷி பகிர்ந்த வீடியோ….!!!

உணவு பரிமாறுபவர் ஒருவரின் திறமையை பார்த்து வியந்து இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ள வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பலரும் தங்களது வேலைகளில் தனித்திறமையை வெளிப்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சவால்களை தங்களது வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்ற தெரிந்தவர்கள்.

   

அதில் எளிதில் வெற்றியும் பெறுகிறார்கள், அந்த வகையில் உணவு பரிமாறும் நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் உணவு பரிமாறும் வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக ஆனந்த் மகரிஷி அவர்கள் கடின உழைப்பாளிகளையும், பன்முக திறமை கொண்டவர்களையும் அங்கீகரிப்பதில் முதன்மை வாய்ந்தவர்.

அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணையத்தில் பதிவிடுவது இவரது வழக்கம். அதனை அவர் பகிர்ந்து தெரிவித்துள்ளதாவது “வெயிட்டர் ப்ரோடுக்டிவிட்டி ஒலிம்பிக் விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும். இந்த ஜென்டில்மேன் அதில் தங்கத்திற்கான கடும் போட்டியாளராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் இந்த ஊழியரின் திறமையை பாராட்டி வருகிறார்கள்.