‘பாரதி கண்ணம்மா’ திருமண விழாவில் கலந்து கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள்… யார் யார் தெரியுமா?… நீங்களே பாருங்க….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று  ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் தற்போது பல வருடங்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஆயிரம் எபிசோடை நிறைவு செய்து அதனை கோலாகலமாக கொண்டாடினார்கள் பட குழுவினர்.

   

சீரியல் ஆரம்பித்த நாளில் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இழுவாய் இழுத்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது. தொடர்ந்து ரசிகர்கள் ‘எப்பொழுதுதான் இந்த சீரியலை முடிக்க போகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்க தொடங்கினர்.

ஒரு வழியாக ரசிகர்களின் ஆசை தற்பொழுது நிறைவேற உள்ளது. தற்பொழுது இந்த சீரியலில் பாரதி தனது சுயநினைவு அனைத்தையும் இழக்க, கண்ணம்மா பழைய கண்ணம்மாவாக மாறி அவரின் நினைவுகளை மீட்டெடுத்துள்ளார். இந்நிலையில் கண்ணம்மாவும் பாரதியும் ஒன்று சேர்ந்து விட்டனர்.

தற்பொழுது இவர்களின் திருமண விழா இந்த சீரியலில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த திருமண விழாவில் பிக் பாஸ் பிரபலமான நடிகர் ஆர்.ஜே பாலாஜி, பிக் பாஸ் சினேகன் அவருடைய மனைவி கணிகா மற்றும் ஷிவின் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது. தற்பொழுது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)