கையில் டாட்டூ போட்டுக் கொண்ட பிக் பாஸ் தனலட்சுமி… அட இவர் மேல உங்களுக்கு அவ்வளவு காதலா?… வைரலாகும் வீடியோ இதோ…

பிக் பாஸ் பிரபலமான தனலட்சுமி தனது கையில் டாட்டூ போட்டுக் கொண்ட வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது .இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர் .மீதம் 14 பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.

   

இதை தொடர்ந்து இறுதியாக ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதேபோல டிக்கெட் டு பினாலே டாஸ்க் மூலம்  அமுதவாணன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார். இவரை தவிர மற்ற மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வார எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் விட்டு வெளியே சென்ற பலரும் உள்ளே நுழைந்து வீட்டில் உற்சாகத்தை  வருகின்றனர். அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தனலட்சுமி.

இவர் 70 நாள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்தார். இவரது நாமினேஷன் இன்று வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்த இவர் ஆனால் எலிமினேட் ஆனது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் புறம் பேசிக்கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு மத்தியில் இவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். தற்பொழுது பிக் பாஸ் தனலட்சுமி கையில் டாட்டூ ஒன்றை வரைந்து உள்ளார்.

அதாவது இவர் தனது கையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி லோகோ டாட்டூவாக வரைந்துள்ளார். தற்பொழுது இதனை வீடியோவாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் எந்த அளவுக்கு இந்நிகழ்ச்சியை காதலிக்கிறார் என்பதை குறிப்பிட்டுள்ளார் . தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Dhanalakshmi (@dhanalakshmi_ofcl)