‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலங்கள்… இவர்கள் தானா?… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்… குவியும் லைக்ஸ்கள்….

இயக்குனர்  பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா என பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான்  சந்திரமுகி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துக் கொண்டு வருகிறார் .

   

இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது. ‘சந்திரமுகி 2’  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்தினை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரபல மலையாள நடிகை மஹிமா நம்பியார் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

நடிகர் வடிவேலுவும், ராகவா லாரன்சும் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி குவித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் இதில் நடிக்கும் நடிகைகள் பற்றிய தகவல் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.