தொகுப்பாளினி பாவனாவின் திருமண புகைப்படத்தை பாத்திருக்கீங்களா?… அப்பவே எவ்ளோ அழகு… இதோ பாருங்க…

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன். ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பின் ராஜ் டிவியில் Beach Girls நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவரை தொகுப்பாளினி என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்ல முடியாது.

   

தொகுப்பாளினி, டான்ஸர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ், ஜர்னலிசம் என பன்முகத்தன்மை கொண்டவர். தற்பொழுது இவருக்கு 37 வயது  என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

அந்த அளவிற்கு ஸ்லிம் மற்றும் பிட்டாக இருப்பார். எம்பிஏ வரை படித்துள்ள இவர் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர். ஐபிஎல் கபடி லீக்கென ஸ்போர்ட்ஸ் துறையில் முத்திரை பதித்து வருகிறார்.

இவருக்கும் மும்பையைச் சேர்ந்த நிகில் ரமேஷுக்கும் பல வருடங்களுக்கு முன்பு திருமணமானது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தொகுப்பாளினி பாவனா.

தற்பொழுது இவரின் பலரும் பார்த்திடாத திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அப்பவே இவ்ளோ அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த அழகிய திருமண புகைப்படம்…