இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா?… இவரா?… இவ்ளோ கியூட்டா இருக்காங்களே… 

நடிகை மதுபாலா தனது சிறு வயது புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. இவர் தமிழில் ரோஜா, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, இருவர் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், மம்முட்டியுடன் முதன்முதலில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில்  1991-ஆம் ஆண்டு அழகன் படத்தில் தமிழில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார். சினிமாவில் பிஸியாக இருக்கும் பொழுதே 1999ல் ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமயா மற்றும் கெயா என இரு மகள்களும் உள்ளார்கள். இவருடைய நடிப்பு இன்றுவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

தற்பொழுது இவரின் மகள்களும் இவரை போலவே அழகாக இருப்பதால் விரைவில் சினிமாவில் நடிக்க வருவார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. தற்போது இவர் தனது சகோதரரின் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தனது சகோதரர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்’ நடிகை மதுபாலாவா இவர்? சின்ன வயசுலயே இவ்வளவு அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Madhoo Shah (@madhoo_rockstar)