மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மகனா இது?… அதுக்குள்ள இவ்வளவு பெருசா வளந்துட்டாரா?… அப்பாவை போலவே இருக்காரே…. நீங்களே பாருங்க…

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் மேக்னராஜன் மகனின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மேக்னா ராஜ் .இவர் கன்னடத்தில் தன்னுடன் அதிக படங்களில் இணைந்து நடித்த நடிகர் சிரஞ்சீவி ஷர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர்களின் காதல் திருமணம் இரு வீட்டார் சம்பத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

   

ஒன்றாக இணைந்து வாழ்ந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. நடிகர் சிரஞ்சீவி ஷர்ஜா திடீரென ஏற்பட்டால் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய உயிரிழப்பு அவரது ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. நடிகர் சிரஞ்சீவி ஷர்ஜா இறந்த பொழுது அவரது மனைவி மேக்னராஜ் மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். தனது கணவரை அவர் கட்டியணைத்து அழுது முத்தம் கொடுத்த வீடியோ காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதைத் தொடர்ந்து மேக்னராஜுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. நடிகர் சிரஞ்சீவி உருவப்படத்தை வைத்து இந்த விழாவை நடத்தினர். தற்பொழுது அவருக்கு குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டது. மேக்னராஜ் தனது மகனுடன்  இருக்கும் அழகிய புகைப்படத்தை அவ்வப்பொழுது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் மகன் ராயல் ராஜ் சர்ஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சிரஞ்சீவி சர்ஜாவின் மகனா இவர்? இவ்வளவு பெருசா வளந்துட்டாரே… பார்க்க அப்பாவை போலவே இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…