‘மக்களை ஏமாத்தாதீங்க… அவங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்’…மருத்துவத் துறையை விளாசிய திவ்யா சத்யராஜ்… வைரலாகும் வீடியோ இதோ…

மருந்து கடைகளில் காலாவதியான மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என சத்யராஜ் சத்யராஜ் மகள் வலியுறுத்தி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சத்யராஜ். இவரது மகள் திவ்யா சத்யராஜ் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். நடிகர் சத்யராஜ் இவரை சினிமா துறையில் இருந்து விலக்கி ஊட்டச்சத்து நிபுணராக மாற்றியுள்ளார். இவர் மருத்துவத்துறைசார்ந்த பல சேவைகளை செய்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

   

இவர் தற்பொழுது மிக முக்கியமான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ”என்னிடம் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி மருந்தகத்தில் வாங்கிய சில மருந்துகள் காலாவதி தேதியை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது போன்ற காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஏராளமான உடல், உபாதைகள் ஏற்படலாம். இது போல பல முறை நிகழ்ந்துள்ளது. பல முறை பல மருந்து கடைகளில் இது போன்ற காலாவதியான மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது முதல் தடவை அல்ல, பல மருந்து கடைகளில் பல முறை இது நடந்துள்ளது. மக்கள் தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவர்கள் வாங்கும் அனைத்து மளிகை பொருட்கள், மருந்துகள் என அனைத்திலும் காலாவதி தேதியை பார்த்த பிறகு வாங்க வேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்க கூடிய சிரப், கிரீம், ஷாம்பு, பால் பவுடர் என எது வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக முக்கியமானது.

எந்த துறையிலும் தவறுகள் நடக்க கூடாது. அதிலும் மருத்துவ துறையில் தவறுகள் நடந்தால் அது மனிதனின் உடல் நலத்திற்கும் உயிருக்கும் ஆபத்து. மருந்து கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மக்கள் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் மருந்து வாங்குகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சினையை அந்த மருந்து குணப்படுத்தும் எனும் நம்பிக்கையில் தான் வாங்குகிறார்கள்.

பண சம்பாதிப்பதற்காக அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவது மனிதநேயம் இல்லாத ஒரு செயல். பணத்தை விடவும் மனிதநேயம் தான் முக்கியம்; மருத்துவத்துறைக்கும் நியாயம், தர்மம் உள்ளது என்பதை மறக்காதீர்கள். உங்கள் கடையில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்வதற்கான ஒரு சிஸ்டத்தை கொண்டு வரவேண்டும். மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள்” எனக் கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…