நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவின் அக்காவை பார்த்து இருக்கீங்களா?… அடடே இவரா?… பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ…

கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர்  எஸ் ஜே சூர்யா. இவரின் முதல் படைப்பாக திரையுலகில் வெளிவந்த திரைப்படம் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த ‘வாலி’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

   

இதைத் தொடர்ந்து இளைய தளபதி விஜயை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். மேலும் அவர் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான நியூ என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை இவர் இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே ஹீரோவாகவும் களமிறங்கினார்.

நயன்தாராவுடன் கள்வனின் காதலி, நியூட்டனின் மூன்றாம் விதி, திருமகள், வியாபாரி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. ஹீரோவாக மட்டுமல்லாமல் மெர்சல் திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு இணையான ஒரு வில்லன் நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, நடிகர் சிம்புவுடன் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயனுடன் டான் என வரிசையாக தன் நடிப்பில் மாஸ் காட்டி வருகிறார் எஸ் ஜே சூர்யா.

இவருடைய நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இன்னும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது .தற்போது 54 வயதாகும் எஸ் ஜே சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகர் எஸ் ஜே சூரியா வின் குடும்பத்தை நாம் பலரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் ஒருமுறை விருது வழங்கும் விழாவிற்கு எஸ் ஜே சூர்யா வின் அக்கா வந்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ நடிகர் எஸ் ஜே சூர்யாவின் அக்கா இவர் தானா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்….