நடிகை கோபிகாவின் மகன் மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா?… எவ்வளவு பெருசா வளந்துட்டாங்க… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

நடிகை கோபிகா தனது கணவர் மகன் மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சேரன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஆட்டோகிராப்’. இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக மலையாள பெண்ணாக நடித்தவர் நடிகை கோபிகா. ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமானார் நடிகை கோபிகா.

   

இதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீரா என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் ஏறத்தாழ 30 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதன் பின்னர் 2008 இல் அஜிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டவில்லை. இவர்களுக்கு எமி, எய்தீன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்காங்களா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படம் இதோ….