‘டெல்லி கணேஷ்’ அவர்களின் நிஜ பெயர் இதுதானா?… ஏன் இந்த பெயர் வந்தது உங்களுக்கு தெரியுமா?… அவரே கூறிய தகவல் இதோ….

நடிகர் டெல்லி கணேஷ் தனக்கு இந்த பெயர் வந்ததன் காரணம் பற்றி அவரே கூறிய தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

1976 இல் வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானவர் டெல்லி கணேஷ். இவரை இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் திரையில் அறிமுகப்படுத்தினார். 1979 இல் வெளியான ‘பசி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று.. இரண்டு தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

   

இப்படி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகர் டெல்லி கணேஷ். இதை தொடர்ந்து இவர் நடித்த சிந்து பைரவி திரைப்படம் பாராட்டுகளை பெற்றது. பல படங்களில் பல வகையான துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் திரைப்படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்தார்.

இன்று வரை தமிழ் சினிமாவில் இவர் 600 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு திறமை மட்டும் இல்லாமல் எளிமை, அப்பாவித்தனம், நட்பார்ந்த பாவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் முகமும் தோற்றமும் கூட டெல்லி கணேசன் மக்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது என்றே கூறலாம். இவர் தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நிருபர் அவரிடம் உங்களுக்கு ‘டெல்லி கணேசன் என்ற பெயர் வர காரணம் என்ன?’ என கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், ”என்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் திரு. பாலச்சந்தர். என்னிடம் அவர், சினிமாவிற்கு தகுந்த மாதிரி உன் பெயரை மாற்றிக்கொள் என்று கூறினார். அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.

அந்த நேரத்தில் பாலச்சந்தர் என்னிடம் ‘நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் உன் பெயரை டெல்லி கணேஷ் என்று வைத்துகொள் என்றார். நானும் அவர் சொன்னவாறு பெயரை மாற்றிவிட்டேன். மேலும் என்னுடைய நிஜ பெயர் கணேசன் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.