‘தென்றல்’ சீரியல் நடிகர் தீபக்கின் மனைவி மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா?… உங்களுக்கு இவ்வளவு அழகான மனைவியா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ…

பிரபல சீரியல் நடிகர் தீபக் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற பல சேனல்கள் இன்று நல்ல சீரியல்களை ஒளிபரப்பி இல்லத்தரசிகளை கவர்ந்து வருகின்றனர். ஆனால் சீரியல்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருப்பது சன் டிவி தான். சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் ஹிட் கொடுத்துள்ளது. அந்த வகையில் சன் டிவியில் 14 வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட ‘தென்றல்’ சீரியலில் கதாநாயனாக நடித்தவர்தான் தீபக்.

   

இவர் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்த இவர்  ‘இவனுக்கு தண்ணீல கண்டம்’ போன்ற ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். ஒரு நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான’ ஜோடி நம்பர் ஒன்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொடர்ந்து ஒரு சில ஆண்டுகள் மீடியாவை விட்டு விலகி இருந்த இவர், மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் ரி என்ட்ரி கொடுத்தார். தற்பொழுது இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகர் தீபக் சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் தீபக் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு அழகான மனைவியா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….