இயக்குனர் லிங்குசாமியின் அழகான மகளை பார்த்திருக்கீங்களா?… அவர் RJவாக வேலை செய்து வருகிறாரா?… வைரலாகும் தகவல் இதோ…

இயக்குனர் லிங்குசாமியின் மகள் புகைப்படமும், அவரைப் பற்றிய தகவல்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் முதன் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து 2001ல் ‘ஆனந்தம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முதன்முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து ரன், சண்டக்கோழி ,பையா, வேட்டை, அஞ்சான் என பல சூப்பர் ஹிட் படங்களை திரையுலகில் கொடுத்துள்ளார். இவருடைய திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும், அதிக வசூலையும் ஈட்டியும் வருகிறது.  சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி  நடித்து வெளிவந்த ‘தி வாரியர்’ என்ற படத்தை இயக்கினார்.

இயக்குனர் லிங்குசாமிக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால் இவரைப் பற்றிய தகவல்களோ புகைப்படங்களோ  இணையத்தில் வெளியானது கிடையாது .தற்பொழுது முதன்முறையாக இணையத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் மகளின் பெயர் சியாமளா என்றும், இவர் தற்பொழுது  BlackSheep சேனலில் Rjவாகவும், மற்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்கும் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.