‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய பலரும் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்கள் இதோ…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் தற்போது தொடர்ந்த டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை இங்கு நாம் காண்போம்.

ஜனனி:

   

எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மதுமிதா. இவர் ஏற்கனவே கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இதுவே இவரது முதல் தமிழ் சீரியல் ஆகும். சமூக வலைத்தளத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சக்தி:

எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகனாக சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரசாந்த் சபரி. இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதுதான் அவருக்கு சின்னத்திரையில் முதல் சீரியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வரி:

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனகா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திருமணத்தை தொடர்ந்து வெள்ளித்திரையிலிருந்து விலகிய இவர், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார்.

ரேணுகா:

எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தர்ஷினி. இவர் தனது சிறப்பான நடிப்பை இந்த சீரியலில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இவர் படங்களில் நடித்த பிரபலமானதை விட எதிர்நீச்சல் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதிமுத்து குணசேகரன்:

நடிகர், இயக்குனர் பல முகங்களை கொண்டு வெள்ளித்திரையில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து . இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். சமீபத்தில் இவர் பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் மூலம் இவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.