‘குக் வித் கோமாளி’ கனியின் கணவர் ஒரு பிரபல இயக்குனரா?…. பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹீட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

   

சமையல் நிகழ்ச்சியை இவளவு காமெடியாகவும் நடத்த முடியும் என்பதை இந்நிகழ்ச்சி காட்டி வருகிறது. மக்களின் பேராதரவை பெற்ற இந்த ஷோ தற்பொழுது 3 சீசன்களை கடந்து 4 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியின் சீசன் 2ல் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் தான் கனி. இவர் ‘காதல் கோட்டை’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனராகிய அகத்தியனின் மூத்த மகளாவார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் ‘காரக்குழம்பு கனி’ என இன்னும் பிரபலமானார்.

ஆனால் கனியின் உண்மையான பெயர் கார்த்திகா அகத்தியன். ஆனால் இவரை கனி என்று தான் பலருக்கும் தெரியும். இவரது கணவர் திரு தமிழ் சினிமாவில் நான் சிகப்பு மனிதன், சமர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் கனி தற்பொழுது ‘வள்ளிமயில்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் திரு மற்றும் கனி தம்பதிக்கு திருமணமடைந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் இயக்குனர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மனைவி கணியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, ‘என்னிடம் நீங்கள் இருக்கும் பொழுது மேலும் கேட்க முடியாது. உங்கள் வாழ்க்கையின் துணையாக இருப்பதால் மிகவும் அதிர்ஷ்டவசாலி.

15வது நாள் திருமண வாழ்த்துக்கள்’ என அழகாக பதிவு செய்திருந்தார். தற்பொழுது இதை தொடர்ந்து ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.