‘அந்நியன்’ திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது இந்த நடிகரா?… வருத்தத்தில் பிரபல நடிகர்… இணையத்தில் வைரலாகும் தகவல் இதோ….

‘அந்நியன்’ திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்த ஒப்பந்தமான நடிகர் பிரபல நடிகர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

2005 இல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘விக்ரம்’ நடிப்பில் வெளியான பிரமாண்டமான திரைப்படம் ‘அந்நியன்’. இத்திரைப்படத்தை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். கதாநாயகனாக வரும் விக்ரம் அம்பியாக, அந்நியனாக, ரெமோவாக என தனிநபர் வாழ்வியலின் மூன்று விதமான குணங்களை வெளிப்படுத்தி இருப்பார்.

   

அதிலும் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை கொடுக்கும் கொடூரமான நாயகனாகவும் தோன்றியிருப்பார் விக்ரம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதேசமயம் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது என்பதையும் தவிர்க்க முடியாது.

இப்படத்தில் இயக்குனர் சங்கர் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தை அமைத்து சண்டை காட்சிகள் மற்றும் கதை வசனங்கள் என அனைத்திலும் கலக்கி இருப்பார். எனவே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது.  நடிகர் விக்ரம் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

தற்பொழுது சூப்பர் ஹிட் ஆன இத்திரைப்படத்தில் நடிக்க முதன்முதலில் ஒப்பந்தமான பிரபல நடிகரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம். நடிகர் ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.