துணிவு பட நடிகை மஞ்சுவாரியாரின் மகளா இது?… அச்சு அசலா அம்மாவைப் போலவே இருக்காங்களே… வைரல் புகைப்படம் இதோ…

துணிவு பட நடிகையான நடிகை மஞ்சுவாரியார் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக களமிறங்கியுள்ளார் நடிகை மஞ்சு வாரியார். இவர் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகைகலிள் ஒருவராக வலம் வருபவர்.

   

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்பொழுது இவர் நடிகர் அஜித் உடன் இணைந்து நடித்த துணிவு திரைப்படம் 11ம் தேதி ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

 

ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.. இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியாரின் மகளின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1998ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி எனும் ஒரு மகளும் உள்ளார்.

பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2015ல் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்….