மகள் திருமணத்தில் கன்றோல் பண்ண முடியாத கண்கலங்கிய ஷங்கர் மற்றும் அவரது மனைவி..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் சங்கர். இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கு உள்ளார்.இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

   

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் ஆறு மாத காலம் கூட சேர்ந்து வாழாமல் இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனார். இந்நிலையில் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு தருண் கார்த்திகேயன் என்பவருடன்   இரண்டாவது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

கமலஹாசன், மணிரத்தினம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், சியான் விக்ரம் சூர்யா, கார்த்திக் ,சுகாசினி ,சிரஞ்சீவி, ரன்வீர் சிங், அட்லீ, காஜல் அகர்வால்  போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இயக்குனர் ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு மருமகன்  தாலி கட்டும்பொழுது ஒரு தந்தையாக மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.