பூஜா – ஜான் கோக்கேன் தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா..?

2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

நடிகை பூஜா ராமச்சந்திரன் இவர் மார்ச் 22 ஆம் தேதி 1984 அன்று பிறந்தார். இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இவர் தந்தை ராமச்சந்திரன் மன்னாட்டில் தாய் சுஜாதா ராமச்சந்திரன் இவருக்கு ஆர்த்தி என்கின்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

இவர் தந்தை ஒரு ஆர்மி ஆபிசர்.பெங்களூருவில் உள்ள பால்ட்வின் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், தமிழ்நாடு குன்னூரில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளி படிப்பை முடித்தார்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்தார் .

இவர்  எட்டு வயதில்  விளம்பரங்களில் நடித்துள்ளார்.  2004 ஆம் ஆண்டு வெளியான படமான யாத்ரகருடே ஸ்ரதக்கு  படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில்  பீட்சா,  நண்பேண்டா, காஞ்சனா 2,Black Coffee  போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற  படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் கோயமுத்தூர் என்ற போட்டியில் கலந்து கொண்டு  பட்டத்தை வென்றார்.

இதைத்தொடர்ந்து  2005 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளா போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

எஸ் எஸ் மியூசிக்கில் விஜய்வாக பணியாற்றினார் .இதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டுஒளிபரப்பான  ‘அணு அளவும் பயமில்லை’ சீசன் 1 பங்குற்றி வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது நீண்ட நாள் காதலரான கிரேக் கேலியோட்டை 2010 ஆம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்

இவர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2வில் வைல்ட் போட்டியாளராக பங்கேற்றார். நடிகை பூஜா  நடிகர் ஜான் கோக்கனை  2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் கணவர் ஜான் கோக்கேன், பாகுபலி, கேஜிஎஃப் வீரம், சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் சமீபத்தில் வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளன.ர் இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.