‘ராஜா ராணி 2 ‘சீரியல் நடிகர் சைவம் ரவியின் மனைவி இவர் தானா.. வெளியான குடும்ப புகைப்படங்கள்..

சின்னத்திரை சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்புள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

அந்த வகையில்  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்களில்  ஒன்றான ‘ராஜா ராணி சீசன் 2’ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில்  மூத்த அண்ணன் சரவணன் கதாபாத்திரத்தில் சித்துவும்  செந்தில் கதாபாத்திரத்தில் பாலாஜியும்.

அம்மா ரோலில் பிரவீனா , சரவணனின்  இரண்டாவது தம்பியாக விஜே பிரதோஷ் ,பார்வதியாக வைஷ்ணவியும் , மயில் கதாபாத்திரத்தில் சுஜியும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில்  வேலைக்குசெல்லும்  மருமகளின் நிலை பற்றி அமைந்த கதையாகும்.

இந்த சீரியல் ஆனது ஹிந்தி சீரியல் ஆன Diya aur baati hum ரீமேக் ஆகும். இந்த சீரியலை பிரவின் பென்னெட் இயக்கி வருகிறார்.

சரவணன் அப்பாவாக சுந்தரம் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சைவம் ரவி.இவர்  சைவம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் ஆர்யாவின் நெருங்கிய நண்பரும் கூட .இவர்  தமிழில் ஓரம் போ, நான் ,மதராசபட்டினம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு வழக்கறிஞர். நடிகர் ரவி குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் பிரகாஷ், சாய் சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது