அக்கா மகள் திருமண விழா.. அருண் விஜய் போட்ட குத்தாட்டம்.. வைரல் வீடியோ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அருண் விஜய், இவரின் தந்தை, இவரின் தங்கை என அனைவருமே தமிழ் சினிமாவில் ஜொலித்தவர்கள் தான், இவரின் குடும்பத்திலேயே பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

Vijayakumar grand daughter Diya engagement photos and family photos goes viral online | Vijayakumar: வனிதா மட்டும் மிஸ்ஸிங்.. கோலாகலமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியின் ...

   
View this post on Instagram

 

A post shared by shashi_mehndi_official (@shashipinkie)

விஜயகுமார் முத்துக்கன்னு மற்றும் நடிகை மஞ்சுளா இருவரை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. விஜயகுமார்-மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி.

இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள்.

Anitha Vijayakumar Daughter Engagement: நடிகர் விஜய் குமார் பேத்திக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!

விஜயகுமார் மகள் அனிதா, கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த ஆண்டு அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் பிப்ரவரி 19ம் தேதி, நாளை நடைபெற இருக்கிறது. திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில், திருமண விழாவில் அருண் விஜய், தனது அக்காவுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.