‘சுந்தரி’ சீரியல் கேபிரியல்லா வுக்கும்…. ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் வினுஷா தேவிக்கும் இப்படி ஒரு உறவா?…. தீயாய் பரவும் தகவல் இதோ….

‘சுந்தரி’ சீரியல் நடிகை கேபிரியல்லா மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை வினுஷா தேவி இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘சுந்தரி’. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து கலக்கி வருபவர் கேபிரியல்லா. அதேபோல விஜய் தொலைக்காட்சியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை வினுஷா தேவி இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது. அதாவது இவர்கள் தங்களது ஒரிஜினல் கலரினால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

   

மேக்கப் போட்டு அழகாக இருந்தால்தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற நிலை போய் தங்களுக்கு ஒரிஜினல் கலரை வைத்தே ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்கள் இந்த கதாநாயகிகள். அந்த வகையில் இரண்டு நடிகைகளுமே ‘கருப்பு தேவதைகள்’ தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த இருநடிகைகளுமே சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்கள். அவ்வப்பொழுது தங்களது புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றனர். தற்பொழுது நடிகை கேப்ரியல்லா  தன்னுடைய இணையதள பக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் ‘ஹலோ கண்ணம்மா என்றென்றும், என்னுடைய தங்கச்சி’ என்று பதிவு செய்துள்ளார். அதற்கு வினுஷா தேவி ‘வணக்கம் சுந்தரி அக்கா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு உறவா?’ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….