இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விவரம்…

தென்னிந்திய சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இப்படிப்பட்ட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள் குறித்த தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

   

பொதுவாக திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களின் உச்சபட்ச கனவு என்பது ஆஸ்கர் விருதுதான். வேற்று மொழி திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கு ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து திரைப்படம் அனுப்பப்பட்டு வருகின்றது. இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு குழுவால் சிறந்த படங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் முதன் முதலில் இந்திய அரசால் 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தெய்வமகன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இயக்குனர் திரிலோக சந்தர் இயக்கத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் சிவாஜி நடித்த தெய்வமகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இருந்து அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

அடுத்ததாக கேங்ஸ்டர் படங்களுக்கு டிரேட் மார்க்கை கொடுத்த திரைப்படம் தான் மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான நாயகன். கடந்த 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் நாயகன் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

அதனைப் போலவே மணிரத்தினம் இயக்கத்தில் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அஞ்சலி திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த திரையுலகமே வியந்து பார்த்த கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான தேவர்மகன் என்ற திரைப்படம்சிறந்த வெளிநாட்டு படைப்பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கடந்த 1992 ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆஸ்கர் விருதை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தீவிரம் காட்டிய கமல்ஹாசனின் மற்றொரு திரைப்படமான குருதிப்புனல் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படமும் அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

1998 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் திரைப்படமும் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பிறகு கமல்ஹாசனின் மற்றொரு திரைப்படமான ஹேராம் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் இந்திய அளவில் பல விருதுகளை வாங்கி குவித்ததுடன் ஆஸ்கர் விருது காண இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றது.

மேலும் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படமும் வேற்று மொழி படங்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதனைப் போலவே யோகி பாபு நடித்திருந்த மண்டேலா திரைப்படம் அனைவரின் பாராட்டை பெற்று இந்திய அரசால் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இவ்வாறு தமிழ் சினிமாவின் பல திரைப்படங்கள் ஆஸ்கர் விருது வரை சென்று உள்ளனர். ஆனால் எதுவுமே நாமினேஷன் பட்டியலில் கூட இடம்பெற்றதில்லை.