பிரபல கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்கும் தலைவாசல் விஜய்யின் மகள்… வைரலாகும் புகைப்படம்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

குணச்சித்திர கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் தலைவாசல் விஜய் . ‘காதல் கோட்டை’ படத்தில் இவர் நடனமாடிய ‘கவலைப்படாதே சகோதரா’ என்ற பாடல் இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

   

இவர் தமிழ் சினிமாவில் ‘தலைவாசல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலமே இவருக்கு தலைவாசல் விஜய் என்ற பெயர் ஏற்பட்டது. கடந்த வருடம் இவர் நடிப்பில் பிளாக், யானை, லத்தி போன்ற திரைப்படங்கள் வெளியாகியது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.

நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிற மொழி நடிகர்களுக்கு இவர் பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். நடிகர் தலைவாசல் விஜய்யின் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது இவருக்கு ஜெயவீனா என்று ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு நீச்சல் வீராங்கனை. இவர் நேபாள நாட்டின் தலைநகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் தலைவாசல் விஜய் மக்கள் ஜெயவீனாவிற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித் என்பவருக்கும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாபா அபராஜித் ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிரைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.