‘I love you’ சொன்ன இயக்குனர்… அதற்கு ஸ்ருதிஹாசன் என்ன செய்தார் தெரியுமா?…. வைரலாகும் வீடியோ இதோ…

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக சினிமாவில் களமிறங்கினார். இதைத் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு  இணைந்து நடித்து, தற்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

   

தமிழில் மட்டும் இன்றி இவர் தெலுங்கிலும் தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது காதலுடன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது. தற்பொழுது இவர் சலார், வீரசிம்மா ரெட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து இத்திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வீரசிம்மா ரெட்டி. இத்திரைப்படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் இரு நாட்களுக்கு முன்னர் தெலுங்கில் ரிலீசானது. மேலும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மேடையில் சுருதிஹாசன் பற்றி கூறிய இயக்குனர் கோபிசந்த் ‘ஐ லவ் யூ சுருதிஹாசன்’ என்று கூறிவிட்டார். இதை தொடர்ந்து மேடையில் ஏறி பேசிய சுருதிஹாசன் இயக்குனர் கோபிசந்த்  எனக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று கூறயுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலாகி  வருகிறது.

இதோ அந்த  வீடியோ…