‘தளபதி 67’ பட பூஜையில் பங்கேற்ற சிறு பெண் குழந்தை… யார் தெரியுமா?… அவர் இந்த பிரபல நடிகரின் மகளா?… வைரலாகும் தகவல் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் இருவரும் கூட்டணி சேர்ந்து இருப்பதால் ரசிகர்களிடையே இத்திரைப்படம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

   

இதைத்தொடர்ந்து இப்படத்தின் சூட்டிங் ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் தொடங்கப்பட்டது. தற்பொழுது இப்படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு பட குழுவினர் சென்றிருக்கின்றனர் என்று தகவல் இணையத்தில் பரவலாக வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் பூஜை வீடியோவை நேற்று படக்குழு ரிலீஸ் செய்தது.

தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவில் ஒரு சிறு பெண் குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த பூஜை வீடியோவில் விஜய் மற்றும் த்ரிஷா அருகில் ஒரு சின்ன பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை யார் என்ற கேள்வி தற்பொழுது இணையத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு மகளாக நடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பெண் குழந்தையை பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இவர் பிரபல காமெடி நடிகர் அர்ஜுனில் மகள் இயல்  என்பவர் தானாம்.

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் டிக்டிக்டிக், காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். தற்பொழுது அவரது மகள் இயல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாக உள்ளாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Arjunan Actor (@arjunan_actor)