அட்டகத்தி படத்தில் நடித்த இந்தப் பெண் யார் தெரியுமா.? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க அவங்க யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய திரைப்படம் அட்டகத்தி இந்த திரைப்படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை சிவி குமார் தயாரித்திருந்தார் படத்தில் தினேஷ் டுடோரியல் படுத்துவிட்டு ஆங்கில தேர்வில் போராடும் சராசரி கிராமத்து இளைஞன் அதுமட்டுமில்லாமல் சாலையில் செல்லும் பேருந்தில் பார்க்கும் அத்தனை பெண்களிடமும் தனது காதலை வெளிப்படுத்தி வருபவர், அவர் காதலில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

   

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று கொடுத்தது அதுமட்டுமில்லாமல் தினசரி நல்ல அறிமுகத்தையும் பெற்றுக் கொடுத்தது, அதுபோல் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் ரஞ்சித்தும் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

படத்தின் ஒரு காட்சியில் திவ்யா மற்றும் நதியா என்ற இரண்டு பெண்கள் நடித்திருப்பார்கள் அந்த காட்சியில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை வேற யாரும் இல்லை இந்த திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யாவின் அண்ணி தான் அவர். ஐஸ்வர்யா ராஜேஷை பற்றி பல விஷயங்கள் தெரிந்து இருந்தாலும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இரண்டு சகோதரர்களில் ஒரு சகோதரர் சிறு வயதிலேயே இ ற ந் துவிட்டார் மற்றொரு சகோதரர் மணிகண்டன் சீரியல்களில் நடித்து வருகிறார், அவர் வள்ளி, கேளடி கண்மணி, அழகு ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார், இவரின் மனைவி தான் அட்ட கத்தி திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா,.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் லட்சுமி திரைப்படத்திலும் நடன ஆசிரியராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.