நடிகை கிருத்திகா சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியல்களில் வில்லியாக களமிறங்கிய கிருத்திகாவுக்கு அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் கிருத்திகா நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட ரியாலிட்டி நிகழ்ச்சியில் கிருத்திகா பங்கேற்றார்.
மரகத வீணை சீரியலில் கிருத்திகா பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சமீபத்தில் கிருத்திகா தனது கணவரை விட்டு பிரிந்த விவகாரம் பற்றி கூட பேசி இருந்தார்.
உடல் எடை அதிகமாக இருந்த போது கிருத்திகாவின் கணவர் அதனை கேலி செய்து பேசியுள்ளார்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிந்ததாக கிருத்திகா கூறியிருந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார்.
இந்த நிலையில் கிருத்திகா காஷ்மீருக்கு தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார்.
விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற பேக்கரிக்கும் சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.