நடிகை கனிகா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் இவர் என்ட்ரி கொடுத்தார்.
வெள்ளி திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கனிகா நடித்துள்ளார்.
அந்த வகையில் மாதவன், அஜித், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கனிகா நடித்துள்ளார்.
நடிகை கனிகா சேர்னுடன் இணைந்து ஆட்டோகிராப் படத்திலும் அஜித்துடன் இணைந்து வரலாறு படத்திலும் நடித்து பிரபலமானார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை கனிகா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்த எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் கனிகா நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கனிகா அவ்வபோது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் போட்டோஸ் எடுத்து இணையத்தில் பதிவிடுவார்.
இந்த நிலையில் கனிகா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.