அதீத மழையால் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்… நொடிப்பொழுதில் உயிர்தப்பிய வாலிபர்… வைரலாகும் கேரள காட்சி..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். அப்படியான ஒரு சம்பவம் ஒரு நபருக்கு கேரளத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

   

கேரள மாநிலம் வர்கலை பகுதியில் ஒரு நபர் சாலையை கடக்க நின்றார். அப்போது கடுமையான சூறைக்காற்று வீசிக் கொண்டு இருந்தது. நல்ல மழையும் பெய்தது. இதனைத் தொடர்ந்து, சாலையில் அந்த நபர் கடக்க முயன்றபோது திடீரென சாலையின் எதிரே இருந்த ராட்சச மரம் ஒன்று வேரோடு சாயத் தொடங்கியது. இதை நொடிப்பொழுதில் அவதானித்த அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் அந்த இடத்தில் இருந்து ஓடி தப்பினார்.

சாலையில் பெயர்ந்து விழுந்த மரமானது அந்த வழியாகச் சென்ற மின்சாரக் கம்பியையும் அறுத்துக்கொண்டு கீழே விழுந்தது. வெறும் ஐந்தே நொடிகளில் இந்த பெரிய ஆபத்தில் இருந்து அந்த வாலிபர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.