பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடியதில் ரொம்ப போல்ட் ஆகவும் தைரியமாகவும் விளையாடியவர் அனிதா சம்பத். தனது உரிமைக்காக கொஞ்சம் சண்டை போட்டுக்கொண்டும் இருந்து கொண்டிருந்தார். இதனால் இவரை ரசிக்கும் ரசிகர்கள் அளவிற்கு வெறுக்கும் ரசிகர்களும் இருந்தனர். அனிதா சம்பத் தற்போது இன்ஸ்டாகிராமில் பல்வேறு விஷயங்கள் பற்றி பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அர்ச்சனாவின் சகோதரி வளைகாப்பு விழாவுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு இருந்தார்.
அதற்கு லைக்குகள் குவிந்தது. இந்நிலையில் இன்று அனிதா அவரது குடும்ப விழாவுக்கு சென்று இருக்கிறார். அப்போது தாய்மாமனான அனிதாவின் கணவர் பிரபா மடியில் குழந்தையை அமரவைத்து தான் மொட்டை அடிப்பது நடந்திருக்கிறது. அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் அனிதா ‘அத்தை எல்லாம் சொத்தை’ என குறிப்பிட்டு இருக்கிறார்.
“மொட்டை functionனு வந்துட்டாலே இந்த “தாய் மாமன” மட்டும் தான் தாங்கு தாங்குனு தாங்குறாங்க பா.. அத்தை சொத்தையாக உக்காந்து இருந்த மொமண்ட்..!” என அனிதா குறிப்பிட்டு உள்ளார். தான் இப்படி பதிவிட்டதை youtubeல் “குழந்தையுடன் அனிதா பதிவிட்ட புகைப்படம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்! Moment..” என போடுவார்கள் எனவும் நக்கலாக அவர் குறிப்பிட்டு உள்ளார். இதேவேளை, குறித்த புகைப்படத்தில் உடல் எடை அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
View this post on Instagram