அஷ்வினை முதன்முறையாக பார்த்த போது என்ன தோன்றியது தெரியுமா? உண்மையை உ டைத்த ஷிவாங்கி

டிவி நிகழ்ச்சிகளில் குக் வித் கோ மாளி இரண்டு சீசன்களுக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டாவது சீசன் நிறைவடைந்திருக்கும் நிலையில் கனி வெற்றியாளரானார்.

   

சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை மகிழ்வித்ததில்புகழ், ஷிவாங்கி உள்ளிட்ட இந்நிகழ்ச்சியின் கோ மாளிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அதேபோல் ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் பவித்ராவும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் சதீஷூக்கு ஜோடியாக நடித்து திரைப்பட நாயகியாக உள்ளார். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார்.

குக் வித் கோ மாளி புகழ் ஷிவாங்கி முதன் முறை அஷ்வினை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற பேட்டியில் இது குறித்து பேசிய அவர்,குக் வித் கோ மாளி 2 செட்டில் அஷ்வினை முதன்முறையாக பார்த்த போது இவ்வளவு அழகான ஒருவர் சமைக்க வந்துள்ளாரே என தோன்றியது.

ரொம்பவே டெடிகேட் ஆன ஆள், என் வளர்ச்சியை பார்த்து அவரும், அவரது வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சியடைவோம் என கூறியுள்ளார்.