ஜார்க்கண்ட் மாநிலதில் வங்கி அதிகாரி ஒருவர் ஆக்சிஜன் மாஸ்க்குடன் வேலைக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், தொற்று அதிகம் இருக்கும் மாநிலங்களில் முழு ஊரடங்கும், ஒரு சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ நகரில் இயங்கி வரும் அரசு வங்கியில் பணியாற்றி வரும் ஊழியரான அரவிந்த் குமார் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதோடு அவரின் வங்கி உயரதிகாரிகள் அவருக்கு விடுப்பு கொடுக்க முடியாது என்று கூறியதால் ஆக்ஸிஜன் உதவியுடன் வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அரவிந்த் குமார் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அரவிந்த் குமாரின் வீடியோவில் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி தான் குணமாக எப்படியும் 90 நாட்கள் ஆகும் என்றும்.
தனது நுரையீரலில் தொற்று பாதிப்பு படர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரிக்கும் போது, அரவிந்த் குமார் பொய்யான நாடகங்களை நடத்துவதாகவும், அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவவும், வங்கியில் வாங்கிய கடனை தட்டிக் கழிக்கவும் இந்த டிராமாவை அரங்கேற்றம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.