ஆங்கில படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் இசைஞானி இளையராஜா!! வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ

தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் இசைஞானி இளையராஜா. இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இசையில் எத்தனை வருடம் கடந்தாலும் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

   

இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர்இசைஞானி இளையராஜா. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். இவர் இதுநாள் வரை எந்த ஆங்கிலப்படத்திற்கும் இசையமைத்தது இல்லை, முதன் முறையாக A beautifully breakup என்ற படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றிய அஜித் வாசன் இயக்கவுள்ளார், இதோ அதன் பர்ஸ்ட் லுக்..